கவுண்டம்பாளையத்தில் பெண் சமையலருக்கு தீண்டாமை வன்கொடுமை: விசாரணை

திருப்பூர் மாவட்டம் திருமலை கவுண்டம்பாளையம் அரசு பள்ளி பெண் சமையலறுக்கு தீண்டாமை வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து சிறப்பு கோர்ட்டில் விசாரணை தொடங்கியது.;

Update: 2024-05-21 09:26 GMT
கவுண்டம்பாளையத்தில் பெண் சமையலருக்கு தீண்டாமை வன்கொடுமை: விசாரணை

வன்கொடுமைக்கு ஆளான பெண்

  • whatsapp icon

திருமலைகவுண்டம்பாளையம் அரசு பள்ளி பெண் சமையலுக்கு தீண்டாமை கொடுமை சிறப்பு கோர்ட்டில் விசாரணை தொடங்கியது! அவிநாசி ஒன்றியம் குட்டகம் ஊராட்சிக்குட்பட்ட திருமலைகவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவு சமைத்த பட்டியலென பெண் சமையலர் பாப்பாள் மீது தீண்டாமை வன்கொடுமை கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16ஆம் தேதி நடைபெற்றது. 

இந்த வழக்கு திருப்பூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. கடந்த மாதம் பட்டியலின மற்றும் பட்டியல் பழங்குடியினர் மீதான வன்கொடுமைகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது. வழக்கில் விசாரணையை முடிக்கும் வகையில் நேற்று முதல் வருகின்ற 23ஆம் தேதி வரை நான்கு நாட்கள் தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை நீதிபதி பத்மா முன்னிலையில் பாப்பாளிடம் நேற்று விசாரணை நடைபெற்றது.

Tags:    

Similar News