புதுகையில் தமிழ் கல்லூரி தொடங்க வலியுறுத்தல்!
புதுகையில் தமிழ் கல்லூரி தொடங்க வலியுறுத்தபோட்டுள்ளது
புதுக்கோட்டையில் தமிழ்க் கல்லூரி ஒன்றைத் தொடங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. புதுக்கோட்டையில் நடைபெற்ற இச்சங்கத்தின் செயற்குழுக் கூட்டத்தில் புதுக்கோட்டையில் தீவிரத் தமிழ்ப் பணியில் ஈடுபட்டு வரும் தமிழறிஞர்களுக்கு,
தமிழ்ச் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் வாழ்நாள் தமிழ்த் தொண்டர் விருது வழங்கிடவும், பொங்கல் விழாவைத் தமிழர் மரபுத் திருவிழாவாகக் கொண்டாடவும் வேண்டும். புதுக்கோட்டையில் தமிழ்க் கல்லூரி ஒன்றைத் தமிழக அரசு தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூ
ட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் கவிஞர் தங்கம்மூர்த்தி தலைமை வகித்தார். ராஜ்குமார், ஆலோசகர்கள் ஆர். வழக்குரைஞர் செந்தில்குமார், துணைத் தலைவர் கவி முருகபாரதி உள்ளிட்டோரும் பேசினர். மகாசுந்தர் சங்கத்தின் செயலர் வரவேற்றார். பொருளாளர் கருப்பையா நன்றி கூறினார்.