கால்நடைகளுக்கு வாய்நோய் தடுப்பூசி முகாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் 5-வது சுற்று கால் மற்றும் வாய்நோய் தடுப்பூசி முகாம் நடக்கிறது.

Update: 2024-06-08 07:12 GMT

மயிலாடுதுறை மாவட்டத்தில் 5-வது சுற்று கால் மற்றும் வாய்நோய் தடுப்பூசி முகாம் நடக்கிறது. 

. தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின்கீழ் 5-வது சுற்று கால் மற்றும் வாய்நோய்; தடுப்பூசி முகாம் 10.06.2024 முதல் 10.07.2024 வரை கிராமங்கள் வாரியாக இலவச தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

கால்நடை வளர்ப்போர் தங்கள் கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று மயிலாடுதுறை மாவட்ட ஆடசியர் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளார். இந்நோய் மிககொடிய வைரஸ் கிருமிகள் மூலம் பிளவுபட்ட குளம்புகள் உடைய பசு, எருமை, வெள்ளாடு போன்ற இனங்களை எளிதல் தாக்கக்கூடிய ஒன்று. மேலும், இது காற்று மற்றும் தண்ணீர் மூலம் மிக விரைவாக பரவக்கூடிய தன்மை உடையது. இந்நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளின் வாயிலும் நாக்கிலும் கால்குளம்புகளுக்கு இடையிலும் புண்கள் ஏற்படும். இதனால் தீவனம் உட்கொள்ள இயலாமல் எளிதில் மெலிந்துவிடும்.

வெயில் காலங்களில் மூச்சிரைச்சல், புறத்தோல் தன்மை அடர்த்தியாகவும், அடர்ந்த ரோமங்களுடனும் காணப்படும். பால் உற்பத்தி முற்றிலும் குறைந்துவிடும். பாலூட்டும் கன்றுகள் உடனடியாக இறந்துவிடும். மலட்டுத் தன்மை ஏற்படும். கால்நடை வளர்ப்போர்க்கு மிக பெரிய பொருளாதார இழப்பு ஏற்படும். எனவே, இந்நோய் வராமல் தடுப்பதற்கு கால்நடைகளுக்கு வருடத்திற்கு இரண்டுமுறை தடுப்பூசி மேற்கொள்வது சிறந்த வழியாகும்.

எனவே மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமார் ஒரு இலட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி பணி மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டு மருந்து இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. இம்முகாம் மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் நடைபெற உள்ளது. எனவே கால்நடை வளர்ப்போர், தங்கள் கால்நடைகளுக்கு முகாமில் தடுப்பூசி போட்டு பயன்பெற வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர்ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News