வைகுண்டஏகாதசி...லட்டுகள் தயாரிக்கும் பணி தீவிரம்

திருப்பூர் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு லட்டுகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.

Update: 2023-12-22 10:47 GMT

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க 1 லட்சத்து 8 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. வைகுண்ட ஏகாதசி பெருமாள் கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். திருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவிலில் வெகுவிமரிசையாக வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறும். இந்நிலையில் நாளை (சனிக்கிழமை) வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு வீரராகவ பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக கோவிலுக்கு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு தரிசனத்திற்கு வருகிற பக்தர்களுக்கு வழங்கும் வகையில் ஸ்ரீவாரி டிரஸ்ட் சார்பில் 1 லட்சத்து 8 ஆயிரம் லட்டுகள் திருப்பூர் காமாட்சி அம்மன் மண்டபத்தில் நேற்று நடந்தது. இதில் 200 பேர் ஈடுபட்டனர். பக்தர்கள், தன்னார்வலர்கள் தலைக்கவசம் மற்றும் கையுறை அணிந்து இந்த பணியில் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன் மற்றும் பலர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News