வாணியம்பாடி : புகார் கொடுக்க வந்த பெண்களுக்குள் மோதல் - பரபரப்பு

வாணியம்பாடி அருகே முன் விரோதம் காரணமாக ஆட்களை கொண்டு வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களை உடைத்து கொலை மிரட்டல் விடுத்த பெண் மீது நடவடிக்கை எடுக்ககோரி காவல்நிலையத்தில் புகார் அளித்த வந்த போது, இரு பெண்கள் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிகொண்ட நிகழ்வால் வாணியம்பாடி நகர காவல்நிலைய வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது .

Update: 2023-12-01 06:06 GMT

மோதல் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி முஸ்லீம்பூர், ஷாகிராபாத் பகுதியை சேர்ந்தவர் முஹமத் உவேஸ். கைப்பேசி வியாபாரம் செய்யும் இவர் திருமணம் ஆகி தனது மனைவி, மகள், தாய், மற்றும் தம்பியுடன், ஒரே வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், முஹம்மத் உவேஸ் மற்றும் கபூராபாத் பகுதியை சேர்ந்த மொக்தியார் என்பவரின் மனைவி ஆயிஷா சித்திகா, என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 28.11.2033 அன்று ஆயிஷா சித்திகா, முஹம்மத் உவேஸ் வீட்டிற்கு வந்து அவரது மனைவியை தகாத வார்த்தைகளால் ஆபாசமாக பேசி, அவரிடம் என்னை உன் வீட்டுகாரர் வந்து பார்த்து விட்டு செல்ல சொல் இல்லை என்றால் ஆட்களை வைத்து என்ன செய்வேன் என தெரியாது என மிரட்டி சென்றுள்ளார். அதனை தொடந்து நேற்று முன்தினம் முஹம்மத் உவேஸ் தனது மனைவி, மகள, தாய் மற்றும் தம்பியுடன் சங்கராபுரத்தில் உள்ள உறவினரை பார்க்க சென்றிருந்த நிலையில், மீண்டும் முஹம்மத் உவேஸின் வீட்டிற்கு தனது தந்தை அக்பர் பாஷா மற்றும் அவரது சகோதரர் ஜமீர் மற்றும் பல ஆட்களுடன் வந்த ஆயிஷா சித்திகா பூட்டியிருந்த முஹம்மத் உவேஸின் வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களை உடைத்து, அராஜகம் செய்து, இந்த குடும்பத்தாரை கொல்லாமல் விடமாட்டேன் என அக்கம்பக்கத்தினரிடம் கூறிவிட்டு அவர்களையும் ஆபாச வார்த்தைகளால் திட்டிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.

இதனை தொடர்ந்து வீட்டிற்கு வந்த போது வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்கண்ணாடிகளை உடைக்கப்பட்டிருப்பதை கண்டு, வீட்டில் இருந்து சிசிடிவி காட்சிகளை பார்த்த போது ஆயிஷா சித்திகா ஆட்களுடன் வந்து வீட்டை அடித்து நொறுக்கியது தெரியவந்துள்ளது, இதனை தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை கொண்டு தனக்கும் தனது குடும்பத்தாருக்கும் கொலை மிரட்டல் விடுத்து சென்ற ஆயிஷா சித்திகா மற்றும் அவருடன் வந்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்ககோரி வாணியம்பாடி காவல்நிலையத்தில் முஹம்மத் உவேஸ் மற்றும் அவரது மனைவி புகார் அளிக்க வந்த போது, அங்கு வந்த ஆயிஷா சித்திகாவும், முஹம்மத் உவேஸின் மனைவியும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிகொண்ட சம்பவம் காவல்நிலைய வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News