லஞ்சம் வாங்கிய விஏஓ சஸ்பெண்ட் !
பெரம்பலூரில் திருமண மண்டபத்திற்கு தடையின்மை சான்றிதழ் வழங்குவது தொடர்பாக ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கிராம நிர்வாக அலுவலர் நல்லுசாமியை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து பெரம்பலூர் சார் ஆட்சியர் கோகுல் உத்தரவிட்டுள்ளார்.

பெரம்பலூர் புதியபேருந்துநிலையம் பின்புறம் புதிதாக கட்டப்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் நிகழ்ச்சி வழங்குவதற்காக ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்ட விவகாரத்தில் லஞ்ச ஒழிப்பு போலிசாரால் கையும் களவுமாக பிடிபட்ட பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கோகுல் உத்தரவிட்டுள்ளார். பணிபுரியும் துணை வட்டாட்சியர் பழனியப்பன் தனக்கு நெஞ்சு வலி என பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த போது அவர் திடீரென அங்கிருந்து தப்பி ஓடி விட்ட நிலையில் அவரை போலிசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் நல்லுசாமியை பெரம்பலூர் நீதிமன்றத்தில் லஞ்சஒழிப்பு போலீஸார் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இதனிடையே கைது செய்யப்பட்டுள்ள கீழக்கரை கிராம நிர்வாக அலுவலர் நல்லுசாமியை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து பெரம்பலூர் சார் ஆட்சியர் கோகுல் உத்தரவிட்டு உள்ளார்