வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்துடன் கலந்து கொண்டார்

சேலத்தில் உள்ள வரசித்தி விநாயகர் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-01-22 01:05 GMT

கும்பாபிஷேகம்

சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த 19ஆம் தேதி அன்று முதல் கால யாக பூஜைகளுடன் தொடங்கிய இந்த விழாவில் விக்னேஸ்வரர் பூஜை, அனுக்ஞன, மிருத்சங்கிரணம், அங்குரார்ப்பணம், ரக்‌ஷாபந்தனம், ஆச்சார்ய வர்ணம், கும்ப அலங்கரம், கலாகர்ஷணம், பிரதான மூர்த்திகள் கடம் யாகசாலை பிரவேசம் செய்யப்பட்டு, துவார பூஜை, சப்தவிம்சரி, சோம சூரிய பூஜை, வேதிகை அர்ச்சனை, மூல மந்திர பிஜாசர மந்திர ஹோமம், திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி, தீபாராதனை காட்டப்பட்டது. நேற்றைய தினம் இரண்டாம் கால யாக பூஜைகள் நடத்தப்பட்டு, மாலை மூன்றாம் காலையாக பூஜைகள் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து இன்றைய தினம் காலை 6 மணி முதல், நான்காம் கால யாக பூஜைகளுடன் தொடங்கிய விழாவில் நாடி சந்தானம், பிம்பசுத்தி, ஸ்பார்ஸாகுதி, திரவியாகுதி, மகாபூர்ணாஹூதி, தீபாராதனை நடத்தப்பட்டது.இதனை தொடர்ந்து, வரசித்தி விநாயகர் மூலவர், விமான கோபுர கலசம், சாலை முன்விமான கோபுர கலசம், மகா கும்பாபிஷேக மூலவர் ஸ்ரீ வரசித்தி விநாயகருக்கும், கோஷ்ட தெய்வங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

செண்டை மேளம் ஒலிக்க, பம்பை வாசிக்க வேலூர் மாவட்டம், அருள்மிகு பாலமுருகன் சன்னிதானம் ரத்தினகிரி சுவாமிகள் கும்பாபிஷேகத்தை நடத்தினார். அதிமுக பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் இந்த கும்பாபிஷேக விழாவில் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு, கலச ஊர்வலத்தில் பங்கேற்று கோவிலை சுற்றி வலம் வந்தார். இதனை தொடர்ந்து வரசித்தி விநாயகரை தரிசனம் செய்த அவர், கோபுர கலசங்களுக்கு புனித நீரை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.

அப்போது கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் மக்களோடு மக்களாக நின்று வரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகத்தை பக்தி பரவசத்துடன் தரிசித்தார். அவருடன், சேலம் மாநகர் மாவட்ட கழக செயலாளர் வெங்கடாஜலம், தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாலசுப்பிரமணியன் மற்றும் கழக நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

Tags:    

Similar News