டூவீலரில் செல்லும்போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்து.

டூவீலரில் செல்லும்போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்து. மனைவி உயிரிழப்பு. கணவன் படுகாயம்.

Update: 2023-12-17 17:20 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
டூவீலரில் செல்லும்போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்து. மனைவி உயிரிழப்பு. கணவன் படுகாயம். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி, கொத்தப்பாளையம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராமன் வயது 60. இவரது மனைவி பழனியம்மாள் வயது 55. இவர்கள் இருவரும், இவர்களுக்கு சொந்தமான டூவீலரில் டிசம்பர் 14ஆம் தேதி மாலை 5 மணி அளவில், அரவக்குறிச்சி ஆர்டிஓ அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது, வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததால், வாகனத்துடன் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ராமனுக்கு இடுப்பில் பலத்த காயம் ஏற்பட்டது. பழனியம்மாளுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ராமனை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பழனியம்மாளை மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு சிகிச்சையில் இருந்து வந்த பழனியம்மாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அறிந்த ராமன் மகன் வீராசாமி வயது 36 என்பவர், இதுகுறித்து அரவக்குறிச்சி காவல் துறையினருக்கு அளித்தப் புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த பழனியம்மாள் உடலை உடற்கூறு ஆய்வுக்காக ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.
Tags:    

Similar News