வேலூர்: பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய 3 கடைகளுக்கு அபராதம்!
பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்திய கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
By : King 24x7 Angel
Update: 2024-06-19 06:17 GMT
வேலூரில் மண்டித்தெரு, காந்திரோடு பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்தது. அதன்பேரில் மாநகராட்சி 2வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையிலான குழுவினர் கடைகளில் சோதனை செய்தனர். அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தியதாக 3 கடைகளுக்கு தலா ரூ.500 வீதம் ரூ.1,500 அபராதம் விதிக்கப்பட்டது. மீண்டும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அபராதம் அதிகரிக்கப்படும் என்றும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். மேலும் ஓட்டல்களில் பிளாஸ்டிக் இலைகளை பயன்படுத்தக்கூடாது என்றும் தெரிவித்தனர்.