விஜயகாந்த் மறைவு இரங்கல் கூட்டம்
அனைத்துக் கட்சிகள் சார்பில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது;
By : King 24x7 Website
Update: 2023-12-31 15:12 GMT
அனைத்துக் கட்சிகள் சார்பில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது
தேமுதிக நிறுவன தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக இரண்டு தினங்களுக்கு முன்பாக, சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார்.. லட்சக்கணக்கான பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், ரசிகர்கள் மத்தியில் அவருடைய உடல் , சென்னை தேமுதிக தலைமை அலுவலக இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.. இதனை அடுத்து நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு எம்ஜிஆர் சிலை அருகே, அனைத்து கட்சிகள் பங்கேற்ற இரங்கல் கூட்டம் நடைபெற்றது.. இந்த நிகழ்வுக்கு நகர தேமுதிக செயலாளர் அ.வெள்ளிங்கிரி தலைமை தாங்கினார்.. மாவட்ட பொருளாளர் மகாலிங்கம் முன்னிலை வகித்தார் . இந்த நிகழ்வில் அதிமுக, திமுக, மதிமுக, பாமக, பாஜக ,திராவிடர் விடுதலைக் கழகம், காங்கிரஸ், லோக் ஜன சக்தி கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள், பொதுநல அமைப்புகள், ரசிகர்கள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.. நிகழ்வில் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வில் பங்கேற்றவர்கள், விஜயகாந்த் குறித்த தங்கள் மலரும் நினைவுகளை, பகிர்ந்து கொண்டனர்.