விழுப்புரத்தில் ரயில்வே கேட் மூடல் கறுப்பு கொடி ஏத்தி போராட்டம்

விழுப்புரம் ஜானகிபுரத்தில் ரயில்வே கேட் மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி ஏத்தி போராட்டம்.

Update: 2024-03-29 06:46 GMT

 கறுப்பு கொடி ஏத்தி போராட்டம்

விழுப்புரம் ஜானகிபுரத்தில் ரெயில்வே கேட்டை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் அனைவரது வீட்டிலும் கறுப்பு கொடி ஏத்தி போராட்டம் நடத்தினர். விழுப்புரம் அருகே உள்ளது கண்டமானடி ஊராட்சி, இவ்வூராட்சியில் உள்ள குடியிருப்புகளுக்கு ஜானகிபுரம் வழியாக 1.5 கி.மீ. தொலைவில் உள்ளே செல்ல வேண்டும். இந்த வழியாகவே கொளத்தூர், அரியலூர், சித்தாத்தூர், காவணிப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களுக்கும் செல்ல வேண்டும். மேற்கண்ட கிராம மக்கள் அத்தியாவசிய தேவைக்காக விழுப்புரம் வந்து செல்லவும், மாணவ- மாணவிகள் விழுப்புரம் நகரில் உள்ள பள்ளி- கல்லூரிகளுக்கு வந்து செல்லவும் போக்குவரத்துக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக ஜானகிபுரம் சாலை கருதப்படுகிறது. இதன் வழியாகவே பஸ்கள், ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில், வழியில் உள்ள ஜானகிபுரம் ரெயில்வே கேட்டை திடீரென நிரந்தரமாக மூடப்பட உள்ளதாக கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ரெயில்வே நிர்வாகம் அறிவித்து அதற்கான அறிவிப்பு பலகையை அங்குள்ள ரெயில்வே கேட் பகுதியில் வைக்கப்பட்டது. விழுப்புரத்தில் இருந்து ஜானகிபுரத்தின் வழியாகவே கண்டமானடி மற்றும் அதனை சுற்றியுள்ள 5 கிராமங்களுக்கும் செல்ல வேண்டும். மேலும் கண்டமானடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தபால் நிலையம், கால்நடை மருத்துவமனை, கூட்டுறவு வங்கி போன்றவற்றிற்கு பிடாகம், மரகதபுரம், கண்டம்பாக்கம் , திருப்பச்சாவடிமேடு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் வந்து செல்கின்றனர். ஜானகிபுரம் ரெயில்வே கேட்டை மூடி சாலையை அடைத்து விட்டால், பல்வேறு கிராம மக்களும், உள்ளூர் மக்களும், மாணவர்களும் சென்று வர கடும் சிரமங்களுக்கு ஆளாக நேரிடும். தற்போது புதிதாக அமைக்கப்பட்டு வரும் விழுப்புரம்- நாகப்பட்டினம் 4 வழிச்சாலை திட்டத்திற்காக ஜானகிபுரம் பகுதியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தின் வழியாக சுமார் 5 கி.மீ. தூரம் சுற்றிக்கொண்டு செல்ல நேரிடும். இந்நிலையில் அந்த ரெயில்வே கேட்டை கடந்த வாரம் முதல் நிரந்தரமாக ரெயில்வே அதிகாரிகள் மூட உள்ளதாக அப்பகுதி பொதுமக்களுக்கு தகவல் பரவியது. இதை கேள்விப்பட்டதும் அப்பகுதி மக்கள் இரவு 10.30 மணியளவில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பான சூழல் நிலவியது. இதையறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இப்பிரச்சினை குறித்து ஆர்டிஓ., பேச்சுவார்த்தை நடத்தியதில், மாவட்ட நிர்வாகம் மற்றும் ரெயில்வே நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் பொதுமக்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரம் ஆகியும் கூட இதற்க்காக நடவடிக்கை எடுக்காததால் ஜானகிபுரம் அப்பகுதி மக்கள் அனைவரது வீட்டின் முன்பகுதியில் கறுப்பு கொடி ஏத்தியும், எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை ப புறக்கணிப்பு மேலும் ரயில்வே கேட்டினத்திற்காவிட்டால் வரும் மூன்றாம் தேதி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் போஸ்டர் அடித்து ஊர் முழுவதும் ஒட்டியுள்ளனர்.
Tags:    

Similar News