விருதுநகர் : வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு..!
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து விருதுநகர் ஆட்சியர் ஜெயசீலன் ஆய்வு செய்தார்.;
By : King Editorial 24x7
Update: 2023-10-29 03:29 GMT
வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்த விருதுநகர் ஆட்சியர்
வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்த விருதுநகர் ஆட்சியர்
விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, வடமலைகுறிச்சி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5.86 இலட்சம் மதிப்பில் புதிய சமையலறை கூடம் கட்டப்பட்டு வருவதையும், பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2.55 இலட்சம் மதிப்பில் வகுப்பறை கட்டடம் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை ஆட்சியர் ஜெயசீலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதேபோல், சிவஞானபுரம் ஊராட்சி குறிஞ்சி தெருவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.18.71 இலட்சம் மதிப்பில் வடிகால் அமைக்கும் பணிகள், பெத்தம்பட்டி கிராமத்தில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.50 இலட்சம் மதிப்பில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்புகள் வழங்கும் பணிகள், கூரைக்குண்டு ஊராட்சி அல்லம்பட்டி கிராமத்தில் ஜல்ஜீவன் மிஷின் திட்டத்தின் கீழ் ரூ.31.68 இலட்சம் மதிப்பில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட உயர்மட்ட நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு வரும் பணி, 15- வது மானிய நிதிக் குழுவின் கீழ் ரூ.41.10 இலட்சம் மதிப்பில் துணை சுகாதார மையம் கட்டப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு, பணிகளின் நிலவரம், தரம் குறித்து ஆய்வு செய்தார். மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்குமாறு சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை அவர் அப்போது அறிவுறுத்தினார்.