திருப்பூரில் வாக்காளர் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி.
திருப்பூரில் வாக்காளர் விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் பவன்குமார்ஜிகிரியப்பனவர் தொடங்கி வைத்தார்.;
Update: 2024-01-08 07:54 GMT
வாக்காளர் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நேற்று காலை மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கியது. இதனை மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் தொடங்கி வைத்தார். தொடர்ந்து இந்த பேரணி ரெயில் நிலையம், 60 அடி சாலை, புஷ்பா ஜங்சன் வழியாக மீண்டும் மாநகராட்சியை வந்து அடைந்தது. இந்த பேரணியின் போது வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர். இதில் தேர்தல் துணை தாசில்தார் வசந்தா மற்றும் திருப்பூர் ரைடர் கிளப் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.