மதுரையில் அஞ்சல் அட்டை மூலம் வாக்காளர் விழிப்புணர்வு
மதுரை மாவட்டத்தில் அஞ்சல் அட்டை மூலம் வாக்காளர் விழிப்புணர்வு பணிகளை ஆட்சியர் துவக்கி வைத்தார்.;
அஞ்சல் அட்டை விழிப்புணர்வு
நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024ஐ முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள அஞ்சல் அலுவலகத்தில் இன்று (28032024) மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி மா.சௌ.சங்கீதா. இ.ஆ.ப, அவர்கள், அஞ்சல் அட்டை மூலம் வாக்காளர் விழிப்புணர்வு பணியினை தொடங்கி வைத்தார்.
மதுரை மாவட்டத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு 19042024அன்று நடைபெறவுள்ளது தேர்தல் வாக்குப் பதிவிற்கான முன்னேற்பாடு பணிகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இத்நிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. மா.சென.சங்கீதா, இஆப அவர்கள் உத்தரவின்படி, மதுரை மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் 100% தேர்தல் வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வாக்காளர் விழிப்புணர்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, கடந்தகால தேர்தல்களின் போது குறைந்த அளவில் தேர்தல் வாக்குகள் பதிவான பகுதிகளில் வாக்குப்பதிவு சதவிகிதத்தை அதிகரித்திடும் நோக்கில் இத்தகைய விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி, மாவட்ட தேர்தல் அலுவலர் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. மா.சௌ.சங்கீதா, இஆப, அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள அஞ்சல் அலுவகைத்தில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பொதுமக்களிடையே தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கத்தை வலியுறுத்தும் வகையில்,
தேர்தல் வாக்குப்பதிவு நாளான 19.04.2024 குறிப்பிடப்பட்டு எனது வாக்கு, எனது உரிமை” என்ற வாசகம் அடங்கிய அஞ்சல் அட்டையை பொதுமக்களுக்கு அனுப்பி வைத்து விழிப்புணர்வு பணிகள் மேற்கொண்டார். மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இதுபோல் 1000-க்கும் மேற்பட்ட அஞ்சல் அட்டைகள் பொதுமக்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
இந்த நிகழ்ச்சியின் போது கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) டாக்டர்.மோனிகா ராணா, இ.ஆ.ப.அவர்கள், அஞ்சல் துறை மற்றும் தேர்தல் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.