கூலி தொழிலாளி தற்கொலை
தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-06-02 04:48 GMT
தற்கொலை
தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 37 வயதான கூலித் தொழிலாளி. இவர் தனது இரண்டு பெண் குழந்தைகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிறை சென்று வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று தொழிலாளிக்கும் அவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டது . இதனையடுத்து அவர் வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் சிவகிரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த சிவகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.