ஆலம்பாடி ஊராட்சியில் தண்ணீர் பஞ்சம்: லாரியில் தண்ணீர் வினியோகம்
ஆலாம்பாடியில் ஊராட்சியில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில் பொதுமக்களுக்கு லாரி மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் பகுதிக்குட்பட்ட ஆலாம்பாடி பஞ்சாயத்து நெய்க்காரண் பாளையம் பகுதியில் சுமார் 250க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு மிகவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுமக்கள் தினசரி கூலி வேலைகளை செய்து வாடகை வீட்டிலும் ஒரு சிலர் சொந்த வீடுகளிலும் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக இப்பகுதியில் தண்ணீர் தட்டுபாடு நிலவுவதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 7 நாட்களாக குடியிருப்புகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்த நிலையில் தற்போது பணம் செலுத்தி லாரியில் தண்ணீர் வாங்கி பொதுமக்கள் பயன்படுத்தி வருவதாகவும்,
கடந்த ஒரு வாரத்தில் ஆலாம்பாடி பஞ்சாயத்து தலைவர் ராயல் ரங்கசாமி செலவில் லாரி தண்ணீர் வாங்கி கொடுத்துள்ளார் எனவும் கூறப்படுகிறது. மேலும் 4 பேருக்கு மேலுள்ள குடும்பத்தில் இந்த வாடகை லாரி தண்ணீரும் பற்றாக்குறையாக உள்ளது.
எனவும், உடனடியாக இந்த தண்ணீர் தட்டுபாட்டை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.