மடிப்பிச்சை எடுத்தாவது மீனவர்களுக்கு ரூ.5 கோடி ரூபாய் நிவாரணம் வழங்குவோம்-அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேசம்!
அமைச்சர் கொடுத்த வாக்குறுதி !அதிர்ச்சியில் எதிர்கட்சிகள் .
பாஜக கச்சத்தீவு குறித்து பேசி வரும் இதேவேளையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மீனவர்கள் மத்தியில் மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண்பது குறித்தும்,மீனவர்களுக்கு நிவாரண நிதி கொடுத்தே தீருவோம் என பேசியிருந்தது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 10நாட்களே உள்ள நிலையில் அணைத்து கட்சி வேட்பாளர்களும்,தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்தும் ,எதிர் கட்சியினரை விமர்சித்தும், பல்வேறு பிரச்னைகளை முன் வைத்தும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அந்த வகையில் திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ் கனியை ஆதரித்து ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் மீனவர்களிடையை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில் , ''அமைச்சர் ராஜகண்ணப்பனால் ஒரு லட்சம் பேராவது பயனடைந்து இருப்பார்கள். ஆனால் ஓ.பி.எஸ்ஸால் ஒருவராவது பயனடைந்ததாக சொல்ல முடியுமா? என சரமாரியாக கேள்வி எழுப்பினர் .இதை தொடர்ந்து இங்கு மீனவர்கள் பேசும் போது, இலங்கை கடற்படையினால் இழந்துள்ள தங்கள் படகுளை மீட்கவும், மீட்க முடியாத படகுகளுக்கு நிவாரணம் தரவும் கோரினர்.மீனவர்களின் கோரிக்கையை நாங்கள் முழுமையாக ஏற்று கொள்வதாகவும் ,இலங்கை அரசு பிடித்து வைத்துள்ள படகுகளை நிச்சயமாக மீட்டு தருவதாகவும் அப்படி மீட்க முடியாத படகுகளுக்கு நிவாரணம் தருவோம் எனக் கூறினார்.அதுமட்டுமல்லாமல் மீனவர்களை பழங்குடியினர் இன பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கவும் ,டீசல் விலையை குறைக்கவும், மானிய விலையில் கூடுதல் டீசல் வழங்கவும் நடவடிக்கை எடுப்போம் என்றார் .
மீனவர்கள் பிரச்னைக்காக இரவு பகல் பாராமல் இப்போது பணியாற்றி வருவது போல் எப்போதும் பணியாற்றி அவர்களுக்கு துணை நிற்போம்''என்றார்.இப்படி பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் என பேசியவர் மத்திய அரசு வெள்ள நிவாரணம் உள்ளிட்ட எந்த நிதியையும் தருவதில்லை. ஆனாலும் ஆண்டவன் மீது ஆணையிட்டு கூறுகிறேன். பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு திமுக கட்சியின் மூலம் ரூ.5 கோடி ரூபாய் நிவாரணம் வழங்குவோம். அதற்கு வாய்ப்பு இல்லை என்றால் நானும், அமைச்சர் ராஜகண்ணப்பனும், இந்த தொகுதியின் எம்.எல்.ஏ காதர்பாட்சா முத்துராமலிங்கமும் இணைந்து மடிப்பிச்சை எடுத்தாவது மீனவர்களுக்கு நிவாரண நிதியினை தருவோம் என பேசியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் மீனவர்கள் பிரச்னை குறித்து ஆலோசிக்க, வரும் 21ம் தேதி தமிழக முதல்வரை இலங்கை மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்தித்து பேச உள்ளதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.அந்த சந்திப்பின் போது கட்டாயமாக மீனவர்களுக்கு நிகழும் பிரச்னைகள் குறித்து தீர்வு காணப்படும் என்றார் .
கடந்த சில தினங்களுக்கு முன்னதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானதா, இந்தியாவுக்கு சொந்தமானதா என்கிற வாதங்கள் தொடர்ந்து எழுகின்றன. இந்தியாவில் இருப்பவர்கள் கச்சத்தீவு இந்தியாவுக்குச் சொந்தம் எனவும், இலங்கையில் இருப்பவர்கள் கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தம் எனவும் தமது வாதங்களை முன்வைத்து கோஷங்கள் எழுவது வழக்கமாக உள்ளது. கச்சத்தீவைத் திருப்பிக் கொடுப்பதற்கு எந்த வாய்ப்புகளும் இல்லை.
ஒருவேளை கச்சதீவைக் கொடுத்தாலும் கூட கச்சத்தீவில் இருந்து ஒரு கிமீ தூரம் வரை உள்ளே சென்று, மீன்களைப் பிடிக்க முடியுமே தவிர எங்களுடைய நாட்டுக் கரைக்கு வந்து அவர்கள் மீன் பிடிக்க முடியாது. இந்திய–இலங்கை மீனவர் பிரச்னை தொடர்பாக கலந்துரையாடுவதற்காக தமிழகம், புதுச்சேரி முதலமைச்சர்கள் என்னை தொடர்பு கொண்டனர். இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தேர்தல் முடிந்த பிறகு இந்த பிரச்னை குறித்து பேச உள்ளதாக கூறினார் என்பது நினைவு கூரத்தக்கது .