தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள்

ராசிபுரம் தாலுகாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை பொது செயலாளர் புஸ்சி ஆனந்த் வழங்குகிறார்.

Update: 2024-06-11 07:11 GMT

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் நாமக்கல் கிழக்கு மாவட்டம் சார்பில் நாளை மற்றும் 12ஆம் தேதி சுமார் 32 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி என் ஆனந்த் வழங்குகிறார். இது பற்றி நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் ஜெ.ஜெ. செந்தில்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அவர்கள் ஆலோசனையின் பேரில் நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் நாளை மற்றும் 12-ந்தேதிகளில் நடைபெறும் முப்பெரும் விழாவில் சுமார் ரூ.32 லட்சம் மதிப்பீட்டிலான மக்கள் நலத்திட்ட உதவிகளை கழகத்தி ன் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த வழங்குகிறார்.

11-ந் தேதி காலை 8.15 மணியளவில் ராசிபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெறுகிறது இதை தொடர்ந்து காலை 8.45 மணி அளவில் ராசிபுரம் விருந்தகத்தின் 3-ம் ஆண்டினை தொடங்கி வைத்து சுமார் ரூ. 20 ஆயிரம் மதிப்பில் பொது மக்களுக்கு வேட்டி, சேலை வழங்குகிறார். பிறகு காலை 10.30 மணியளவில் ராசிபுரம் அருகே கட்டனாச்சம்பட்டி கிராமத்தில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நாமக்கல் கிழக்கு மாவட்ட | தமிழக வெற்றிக் கழகத்தின் | மாவட்ட தலைமை அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்து விஜய் பயிலகம், விஜய் கணினியகம் ஆகியவற்றை புஸ்சி ஆனந்த் திறந்து வைக்கிறார். அப்போது மாணவ -மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள், எழுது வழங்குகிறார்.

ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் வழங்குகிறார். கழக கொடியை ஏற்றி வைக்கிறார். மேலும் பொதுமக்களுக்கு புஸ்சி ஆனந்த், பொதுச் செயலாளர் அன்னதானம் வழங்குகிறார். காலை 11.10 மணிக்கு ராசிபுரம் பட்டணம் ரோடு கிருஷ்ண மஹால் திருமண மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் புஸ்சி ஆனத்த கலந்துகொண்டு ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் 9 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு செய்து வைத்து, தங்க நாணயத்துடன் சீர்வரிசை பொருட்களை வழங்கி விருந்து உபசரிப்பு செய்து சீர்வரிசை பொருட்களை வழங்குகிறார். விலையில்லா விருந்தகத்திற்கு உதவிகள் வழங்கிய மாவட்ட நகர. ஒன்றிய, பேரூர் மற்றும் அணி நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்குகிறார்.

நாளை மாலை 4.50 மணிக்கு வெண்ணந்தூர் பேரூர் தலைமை சார்பாக சுமார் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கொடியேற்றி வைத்து பெயர் பலகையை திறந்து வைக்கிறார். அப்போது அங்கு ரொட்டி, பால், . முட்டை திட்டத்தை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குகிறார். மாலை 6 மணிக்கு வெண்ணந்தூர் மேற்கு ஒன்றியத்தின் சார்பாக கொடியேற்றி வைத்து 1 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மாணவ - மாணவிகளுக்கு விளையாட்டு பொருட்கள், பொதுமக்களுக்கு வேட்டி, சேலை, அன்னதானம் வழங்குகிறார். மேலும் மாலை 7 மணி அளவில் ரூ.30 ஆயிரம் மதிப்பீட்டில் சீராப்பள்ளி பேரூராட்சி தலைமை சார்பாக பொதுமக்களுக்கு வேட்டி, சேலை மற்றும் அன்னதானம் வழங்கி கொடியேற்றி வைக்கிறார்.

இரவு 7.30 மணி அளவில் நாமகிரிப்பேட்டை ஒன்றியம் சார்பாக 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கொடி கம்பம், கல்வெட்டு திறந்து வைத்து அங்குள்ள கலையரங்கில் பொதுமக்களுக்கு வேட்டி, சேலை மற்றும் அன்னதானம் வழங்கி பேசுகிறார். நாளை மறுநாள் 12-ந் தேதி காலை 5 மணி அளவில் ராசிபுரம் கைலாசநாதர் கோவிலில் நடைபெறும் நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் ஜெ ஜெ செந்தில்நாதன்" மகள் திருமணத்திற்கு தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைக்கிறார்.

மேலும் அவர் என்.எஸ்.ஆர். ரம்யவர்ஷினி திருமண மண்டபத்தில் நடைபெறும் தலைவர் திருசெந்தில்நாதன் விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்துகிறார். எனவே கழகத்தின் பொதுச்செயலாளர் கலந்து கொள்ளும். 2 நாள் நிகழ்ச்சிகளிலும் தமிழக வெற்றிக் கழகத்தின் அனைத்து மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொண்டனர்.

Tags:    

Similar News