அதரவற்றோருக்கு நலத்திட்ட உதவி
மதுரை பாண்டியன் அப்பளம் உரிமையாளர் ஆதரவற்ற முதியோருக்கு நலத்திட்ட உதவிகளை செய்தார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-08 15:29 GMT
ஆதரவற்றோருக்கு உதவி
மதுரைப்பாண்டியன் அப்பளம் நிறுவனர் தலைவரும்,அகில உலக மதுரையர் இயக்கத்தின் தலைவரும் சமூக ஆர்வலருமான திருமுருகன் மனைவியும்,நிர்வாக இயக்குனர் கிருத்திகுமார் ன் தாய் ராதாஜெயலட்சுமி யின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ராதா ஜெயலட்சுமி அறக்கட்டளை சார்பாக ஏழை எளியவர்களுக்கு சேலை,மாணவிக்கு சைக்கிள்,ஐந்து ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லத்திற்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலும் 300 மரக்கன்று தேசிய நெடுஞ்சாலை நடுவது மட்டுமல்லாமல் அதை பராமரிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் மோகன், சுவாமிநாதன், விஜயராகவன்,முத்து, காசிராஜன்,உள்பட பல்வேறு சங்க பொறுப்பாளர்கள், மற்றும் அரசியல் பிரமுகர்கள்,கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.