கடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக கனமழை

கடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை பெய்த பரவலான கனமழையால் வெப்பம் நீங்கி இதமான சூழல் நிலவி வருகிறது.

Update: 2024-05-08 07:02 GMT

கனமழை 

கடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே வந்தது. இந்த நிலையில் இன்று காலை பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. மழையினால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. மழையினால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News