குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட வந்த கணவரை கொன்ற மனைவி கைது !
ஓசூர் அருகே குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட வந்த கணவரை அடித்துக்கொன்ற மனைவி கைது செய்யப்பட்டார்.;
By : King 24x7 Angel
Update: 2024-06-11 09:28 GMT
கொலை
கைது
ஓசூர் அருகே குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட வந்த கணவரை அடித்துக்கொன்ற மனைவி கைது கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கலுகோபசந்திரம் கிராமத்தை சேர்ந்த பாப்பிரெட்டி(48) என்பவர் குடிபழக்கத்திற்கு அடிமையாக அடிக்கடி மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று இரவு, குடிபோதையில் வந்ந பாப்பிரெட்டி மனைவி மஞ்சுளாவிடம்(48) நீண்டநேரமாக தகராறில் ஈடுபட்டு வந்ததால் இரவு 11 மணியளவில் கணவரின் தொந்தரவு தாங்காமல் வீட்டில் கலி கிண்டும் கட்டையால் அடித்துக்கொலை செய்துள்ளார்.
இரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த பாப்பிரெட்டி உடலை பறிமுதல் செய்த தேன்கனிக்கோட்டை போலிசார் கணவனை அடித்துக்கொன்ற மனைவி மஞ்சுளாவை கைது செய்தனர்.