தேனி அருகே மனைவி, மாமானார் கொலை: கணவர் தலைமறைவு
தேனி அருகே மனைவி, மாமானார் கொலை செய்துவிட்டு கணவர் தலைமறைவகியுள்ளார்.
தேனி அருகே குடும்பத்தகராறு காரணமாக மனைவி, மாமானார் குத்திக் கொலை, கணவர் தலைமறைவு, உடன் வந்தவர் கைது. உசிலம்பட்டி அருகே உள்ள எருமாபட்டியை சேர்ந்தவர் மாயி (55) இவரது மகள் பவித்ரா (25). பவித்திராவிற்கும் உசிலம்பட்டி அருகே உள்ள சொரக்காபட்டியை சேர்ந்த பூவேந்தர் (27) என்பவருக்கும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று நான்கு வயதில் குழந்தை ஒன்று உள்ளது.
கணவன் மனைவி இருவரும் குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது, இதன்காரணமாக இருவருக்கும் சண்டை ஏற்படதன் காரணமாக, பவித்ராவை அவரது தந்தை மாயி பழனிச்செட்டிட்டி முருகன் கோவில் தெருவில் உள்ள உறவினர் வீட்டில் கடந்த மூன்று நாட்களாக இருந்துள்ளனர்.
இன்று பிற்பகல் பழனிச்செட்டிபட்டி வீட்டிக்கு தனது நண்பருடன் வந்த மூவேந்தர் கத்தியால் தனது மனைவி பவித்ராவையும் தடுக்க வந்த பவித்ராவின் தந்தை மாயியையும் குத்தி கொலை செய்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்லும் போது பூவேந்தருடன் வந்த அவரது நண்பர் முருகேசனை அப்பகுதி மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தப்பி ஓடிய பூவேந்தரை பேலீசார் தேடி வருகின்றனர்.