மலேசியாவில் சிக்கி தவிக்கும் மனைவி - மீட்க கோரி மாற்றுத்திறனாளி கணவர் மனு

மலேசியாவில் உள்ள தனது மனைவியை இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கணவர் குழந்தைகளுடன் வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

Update: 2023-10-30 07:10 GMT

குழந்தைகளுடன் மனு அளிக்க வந்த சரவணன் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருப்பூர் மாவட்டம் மங்கலம் பகுதியைச் சேர்ந்த சரவணன் அவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சரவணன் மாற்றுத்திறனாளி என்பதால் தனலட்சுமி பல்வேறு இடங்களில் வீட்டு வேலைக்குச் சென்றுள்ளார். இதனை தொடர்ந்து மலேசியாவில் வீட்டு வேலைக்கு அதிக சம்பளம் தருவதாகக் கூறியதை தொடர்ந்து ஏஜென்ட் ஒருவர் மூலம் ஒன்றரை லட்சம் செலவு செய்து மலேசியா சென்றுள்ளார். ஆனால் ஏஜென்ட் கூறியது போல வேலை வழங்காமல் அதிக வேலை வாங்கியுள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார். அதே வேளையில் சரவணன் தனலட்சுமி தம்பதியினரின் மூத்த மகள் உடல்நிலை பாதிக்கப்பட்டு தற்போது அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை இருப்பதால் அவர் சொந்த நாட்டிற்கு திரும்பி வர வலியுறுத்தியுள்ளார். ஆனால் வீட்டு வேலை செய்யும் இடத்தில் இரண்டு லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் மட்டுமே இந்தியா செல்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளனர். மாற்றுத்திறனாளியான தன்னால் தனது மகள் மற்றும் மகன் ஆகியோரை கவனிக்க முடியாததால் தனது மனைவியை இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சரவணன் மற்றும் தனது மூன்று குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

Tags:    

Similar News