பொன்னமராவதி அருகே முள்செடிகள் அகற்றப்படுமா? மக்கள் எதிர்பார்ப்பு
பொன்னமராவதி அருகே முள்செடிகள் அகற்றப்படுமா? என மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-26 15:54 GMT
சாலையோரம் படர்ந்துள்ள முள்செடிகள்
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள புலவனார் குடியிலிருந்து இடையாத்தூர் வழியாக இடையாத்தூர் விளக்கு வரை உள்ள நெடுஞ்சாலையின் இருபுறமும் முள் செடிகள் அடர்த்தியாக வளர்ந்துள்ளதால் வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
முள் செடிகள் இருசக்கர வாகன ஓட்டுனர்களின் கண்களைப் பதம் பார்த்து வருகிறது. இதனால் அடிக்கடி பலர் காயமடைந்து வருகின்றனர்.
எனவே நெடுஞ்சாலை துறையினர் சாலையின் இரு புறமும் உள்ள முட்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.