அதிமுகவில் சார்பில் போட்டியிட விருப்பமனு

அதிமுகவில் விருப்ப மனு விநியோகம் துவங்கியுள்ளதை தொடர்ந்து ராசிபுரம் ஒன்றிய செயலாளர் வேம்பு சேகரன் நாமக்கல் மக்களவை தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்தார்.;

Update: 2024-02-27 08:11 GMT

விருப்பமனு 

மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு விருப்பமனு விநியோகம் கடந்த புதன்கிழமை தொடங்கியது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் பிப். 21 முதல் விருப்பமனு பெற்றுக்கொள்ளலாம் என்று அக் கட்சியின் பொதுச்செயலர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் விருப்பமனு விநியோகிப்பதற்காக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதிமுக அலுவலக நிர்வாகிகளிடம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்த வந்த நிர்வாகிகள் ஆர்வத்துடன் மனுக்களைப் பெற்றனர். பொதுத் தொகுதியில் போட்டியிடுவோர் ரூ.20 ஆயிரமும், தனித்தொகுதியில் போட்டியிடுவோர் ரூ.15 ஆயிரமும் செலுத்தி மனுக்களைப் பெற்றனர். முதல் நாளில் இருந்தே அதிமுக சார்பில் போட்டியிட ஏராளமானோர் விருப்ப மனு பெற்றனர். மார்ச் 1 வரை விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்படவுள்ளன. ராசிபுரம் ஒன்றிய கழகத்தின் சார்பில் ஒன்றிய கழகச் செயலாளர் வேம்பு சேகரன் விருப்ப மனு அளித்துள்ளார்.

இந்நிலையில் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட ராசிபுரம் அடுத்த சந்திர சேகரபுரம் பகுதியைச் சேர்ந்த அதிமுக ராசிபுரம் ஒன்றிய கழக செயலாளர் வேம்பு சேகரன்  விருப்ப மனு அளித்துள்ளார். இவர் கழகத்தில் உறுப்பினராகவும், தொடர்ந்து மேலும் கழகத்தின் சார்பில் நடைபெறும் அனைத்து‌ நிகழ்ச்சிக்கும் மற்றும் போராட்டம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்ற பல்வேறு நிகழ்வில் இவர் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் புரட்சி தலைவர் எம்ஜிஆர் பிறந்த நாள், நினைவு நாள் மற்றும் அம்மா அவர்களின் பிறந்த நாள், நினைவு நாள் அனுசரிப்பு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்துவார் என அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கு போட்டியிட விருப்பமனு அளித்துள்ளார்.

Tags:    

Similar News