சினிமா தியேட்டரில் ஏ.சி இயங்காததால் பெண்கள் வாக்குவாதம்!

அவிநாசி சினிமா தியேட்டரில் ஏ.சி இயங்காததால் பெண்கள்க வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2024-06-08 12:03 GMT
சினிமா தியேட்டரில் ஏ.சி இயங்காததால் பெண்கள் வாக்குவாதம்!

சினிமா தியேட்டர்

  • whatsapp icon

அவிநாசி சினிமா தியேட்டரில் ஏ.சி இயங்காதால் பெண்கள் வாக்குவாதம். அவிநாசி சேவூர் ரோட்டில் உள்ள ஏ.சி சினிமா தியேட்டரில் நேற்று மாலை ஏராளமானவர்கள் சினிமா பார்க்க வந்துள்ளனர்.அப்போது படம் ஆரம்பித்து இடைவேளை வரை ஏ.சி போடவில்லை. தியேட்டரில் மின்விசிறி வசதியும் இல்லை.

இதனால் குழந்தைகள்,முதியவர்கள், பெண்கள் உள்ளிட்டவர்கள் காற்று இல்லாமல் புழுக்கத்தால் மிகவும் அவதிப்பட்டனர். இந்த நிலையில் படம் இடைவேளை விட்டபோது பெண்கள் உள்ளிட்ட சிலர் தியேட்டர் நிர்வாகிகளிடம் ஏ.சி போடாததால் மிகவும் அவதியாக உள்ளது. ஏன் ஏ.சி போடவில்லை என்று கேட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் ஏசி போடாமல் படத்தை போடக்கூடாது இல்லையேல் பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து ஏ. சி இயக்கப்பட்டு படம் திரையிடப்பட்டது. இதுகுறித்து திரைப்படம் பார்க்க வந்த பொதுமக்கள் கூறுகையில் அடிக்கடி இந்த பிரச்சனை உள்ளது. ஏன் ஏ. சி போடுவதில்லை என்று கேட்டால் முறையாக பதில் சொல்வதில்லை. சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News