நகை திருடிய 2 பெண்கள் கைது

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே பூட்டிய வீட்டில் நகைகளை திருடி சென்ற 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-03-30 09:38 GMT

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே தெள்ளார் கிராமத்தை சேர்ந்தவர் மெய்யப்பன். இவர் வீட்டின் கதவை பூட்டி சாவியை வெளியே ஜன்னல் ஓரத்தில் மாட்டிவிட்டு நிலத்திற்கு சென்றார். மெய்யப்பனின் மகள் யுவஸ்ரீ வந்து பார்த்தபோது வீட்டின் உள்பக்கமாக கதவு தாழிட்டு இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து தந்தைக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் மெய்யப்பன் உள்ளே சென்று பார்த்தார் .

அப்போது பீரோவில் இருந்த 4½ பவுன் நகைகள் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து தெள்ளார் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடி சென்ற 2 பெண்களை கைது செய்தனர் ‌.

Tags:    

Similar News