உடுமலைப்பேட்டையில் தனியார் மதுபானக் கூடத்தை மூட கூறி பெண்கள் போராட்டம்
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் தனியார் மதுபான கூட்டத்தை மூட கூறி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தனியார் மதுபான கூடத்தை மூட கோரி பெண்கள் போராட்டம்! உடுமலை யூ எஸ் எஸ் காலனி பகுதியில் தனியார் மதுபான கூடத்தை மூடக்கூறி பெண்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட நாலாவது வார்டு பகுதியில் யூ எஸ் எஸ் காலனி பகுதியில் 2000 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதன் பிரதான சாலைகளில் இரண்டு தனியார் மதுபானக்கூடங்கள் அரசு மதுபான கடை ஒன்று இயங்கி வருகிறது.இங்கு வருகை தருகின்ற மது பிரியர்கள் பொதுமக்கள் நடமாட முடியாதபடி சாலைகளை ஆக்கிரமித்து இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி விடுவதாக தெரிகிறது.
மேலும் மதுவை குடித்துவிட்டு சாலையில் நடந்து செல்லும் பெண்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருவதுடன் போதை தலைக்கு ஏறியவுடன் வீட்டு வாசல் களில் வந்து படுத்துக் கொள்வதாக கூறப்படுகிறது. இதனால் பெண்கள் தனியாக நடமாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.எனவே தனியார் மதுபானக்கூடத்தை அகற்றக்கோரி பெண்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் அதற்கு உண்டான நடவடிக்கை மேற்கொள்ள படவில்லை இந்த சூழலில் நேற்று மாலை சாலையில் நடந்து செல்லும் பெண்களுக்கு மது பிரியர்கள் இடையூறு ஏற்படுத்தியாக தெரிகிறது.
இதனால் ஆவேசம் அடைந்த பெண்கள் கைக்குழந்தையுடன் தனியார் மதுபான கூடங்களை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்மதுபான கூடங்களை மூடவில்லை என்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாகவும் பெண்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் இரவு உடுமலை தாராபுரம் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.