கஞ்சாவுடன் தொழிலாளி கைது
திருப்பூர் பாளையக்காடு பகுதியில் அரை கிலோ கஞ்சாவுடன் தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்தனர்.;
Update: 2024-05-15 12:37 GMT
கஞ்சா விற்பனை
திருப்பூர் பாளையக்காடு பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக போலீசார் சென்று சோதனை நடத்திய போது அங்கே சந்தேகத்துக்கிடமாக நின்றவரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர் அப்பகுதியை சேர்ந்து தொழிலாளர் தினேஷ் குமார் (வயது 47) என்பதும் அவரிடம் அரை கிலோ கஞ்சா இருந்ததும் தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேஷ்குமார் கைது செய்து அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.