குமரி பகவதி அம்மன் கோவிலில் அத்தாழ பூஜை
குமரி பகவதி அம்மன் கோவிலில் அத்தாழ பூஜை நடைபெற்றது;
By : King 24x7 Website
Update: 2023-10-28 10:49 GMT
ராஜேந்திர பாலாஜி
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தினமும் இரவு 8.30 மணிக்கு அத்தாழ பூஜையும், ஏகாந்த தீபாராதனையும் நடைபெற்றது. இந்த கோவிலில் தொன்றுதொட்டு இரவு கோவில் நடை அடைக்கும் போது நடந்து வருகிற பூஜை ஆகும். இந்த பூஜையில் கலந்துகொண்டு தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம் ஆகும். நேற்று இரவு நடந்த அத்தாழ பூஜையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தார். அவருடன் இந்த பூஜையில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் தாமரை தினேஷ் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.