திருநெல்வேலி அறிஞர்கள் குறித்து இமயம் பெருமிதம்

திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்த தமிழ் அறிஞர்கள் மொழிக்கு ஆற்றி உள்ள சேவை அளப்பரியது என எழுத்தாளர் இமயம் தெரிவித்தார்.;

Update: 2024-02-06 06:30 GMT

 எழுத்தாளர் இமயம் 

திருநெல்வேலி மாநகராட்சி வர்த்தக மையத்தில் பொருநை நெல்லை புத்தகத் திருவிழா நடைபெற்று வருகின்றது. இந்த திருவிழாவில் நேற்று இரவு நடைபெற்ற கருத்தரங்கில் சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் இமையம் கலந்து கொண்டு பேசினார். அப்பொழுது அவர் பேசுகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்த தமிழ் அறிஞர்கள் மொழிக்கு ஆற்றி உள்ள சேவை அளப்பரியது என பெருமையுடன் பேசினார்.
Tags:    

Similar News