சீருடை பணியாளர்களுக்கான எழுத்துத் தேர்வு

இரண்டாம் நிலை காவலர்,சிறைத்துறை காவலர், தீயணைப்புத் துறையினர் சீருடை பணியாளர்களுக்கான எழுத்துத் தேர்வு

Update: 2023-12-10 17:41 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

இரண்டாம் நிலை காவலர்,சிறைத்துறை காவலர், தீயணைப்புத் துறையினர் ,சீருடை பணியாளர்களுக்கான எழுத்துத் தேர்வு விவேகானந்தா கல்வி நிறுவனத்தில் 'நடைபெற்றது. தேர்வு மையத்தை சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி ஆய்வு செய்தார். விவேகானந்தா கல்வி நிறுவன வளாகத்தில் 8819தேர் தேர்வு எழுத விண்ணப்பிருந்தனர். ஆய்வின் போது நாமக்கல் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் கூடுதல் கண்காணிப்பாளர் கனகேஸ்வரி, திருச்செங்கோடு காவல்துணைக் கண்காணிப்பாளர் இமயவரம்பன் ஆகியோர் உடன் இருந்தனர், தமிழகம் முழுவதும் 3359 காலி பணியிடங்களுக்கான சீருடை பணியாளர்களுக்கான தேர்வு 35 தேர்வு மையங்களில் நடைபெற்றது, இந்தத் தேர்வில் 2 லட்சத்து 81 ஆயிரம் பேர் கலந்து கொண்டு தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு விவேகானந்தா கல்வி நிறுவன வளாகத்தில் இரண்டாம் நிலைக் காவலர்கள் ஜெயிலர்கள், மற்றும் தீயணைப்புத் துறையினர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு நடைபெற உள்ளது, இதில் 7ஆயிரத்து 112 ஆண்கள், ஆயிரத்து 677 பெண்கள் என 8,819 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர்.

தேர்வுக்கான அனுமதி சீட்டு, அதனுடன் அசல் அடையாள அட்டை ஆகியவை உள்ளதா எனவும் பலத்த பரிசோதனைகளுக்கு பின்னும் ஆண்களும் பெண்களும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். தேர்வு எழுத வந்த அய்யப்ப பக்தர்களின் துண்டுகள் , தேர்வர்கள் அணிந்திருந்த பெல்ட்டுகள், செல்போன்கள் மற்றும் ஷூக்கள் அனுமதிக்கப் படவில்லை. தேர்வு எழுத வந்தவர்கள் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டு முழுமையான சோதனைக்குப் பின்னரே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். தேர்வு அமைதியான முறையில் நடைபெற்றது.

Tags:    

Similar News