மயிலாடுதுறை மாவட்டத்தில் நள்ளிரவில் வெளுத்து வாங்கிய மழை

மயிலாடுதுறை மாவட்டத்தில் நள்ளிரவில் பெய்த பலத்த மழையால் மயிலாடுதுறை நகரில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு 3 மணி நேரம் இருளில் மூழ்கியது

Update: 2023-11-30 01:14 GMT

இரவு முழுவதும் வெளுத்து வாங்கிய மழை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இரவு 11 மணிமுதல் விடிய விடிய பெய்த பலத்த மழையால் ,மயிலாடுதுறையில் 5.7 செ.மீ., மணல்மேடு 5.2 செ.மீ., சீர்காழி 6.84 செ.மீ.,கொள்ளிடம் 8.42 செ.மீ., தரங்கம்பாடி 6.04 செ.மீ., செம்பனார்கோவில் 3.04 செ.மீ., என  மாவட்டத்தில் சராசரியாக 5.87 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. மயிலாடுதுறையில் நள்ளிரவில் 3 மணி நேரம் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்ததால் ,நகரமே இருளில் மூழ்கியிருந்தது. காலை நேரத்தில் வானம் மேகமூட்டமாக உள்ளது, . மயிலாடுதுறை, குத்தாலம் பகுதியில் இந்தமழை விவசாயத்திற்கு ஏற்ற மழை என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News