இளம்பெண் தற்கொலை
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
Update: 2024-03-23 06:43 GMT
இளம்பெண் தற்கொலை
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த விளாபாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன்(29). இவரது மனைவி சந்தியா(வயது 21). இவர்களுக்கு குழந்தை இல்லாத காரணத்தால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.இதனால் மனவேதனை அடைந்த சந்தியா மண் எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த போளூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.