நகை மோசடி வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டு சிறை

தூத்துக்குடி மாவட்டம் நாரைக்கிணறு அருகே நகை மோசடியில் ஈடுபட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஓட்டப்பிடாரம் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

Update: 2023-12-03 07:05 GMT

சிறை தண்டனை - நீதிமன்றம் தீர்ப்பு 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தூத்துக்குடி மாவட்டம் நாரைக்கிணறு அருகே உள்ள என்.புதூா் பகுதியைச் சோ்ந்த தமிழ்செல்வன் மனைவி உலகாண்ட ஈஸ்வரி (42). இவரது உறவினா் கோவில்பட்டி முத்து நகரைச் சோ்ந்த ஆறுமுகநயினாா் என்பவரின் மகன் முத்துராமலிங்கம் (42). இவா் பரிகார பூஜை செய்வதாகக் கூறி, உலகாண்ட ஈஸ்வரியின் சுமாா் 6.5 பவுன் நகைகளை மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில், நாரைக்கிணறு போலீஸாா் முத்துராமலிங்கத்தை கைது செய்தனா். இவ்வழக்கு விசாரணை, ஓட்டப்பிடாரம் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயந்தி, குற்றம்சாட்டப்பட்ட முத்துராமலிங்கத்திற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
Tags:    

Similar News