நடுரோட்டில் பெண்ணிடம் ஆபாசமாக நடந்த வாலிபர் கைது

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் பெண்ணிடம் தகராற்றில் ஈடுப்பட்டவரை காவல்துறையினர் கைது செய்தனர்.;

Update: 2024-01-29 07:21 GMT
கைது

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் நேசமணி நகர் பகுதி சேர்ந்தவர் சில்வியா ஜோசப் (58). வட்டக்கரை லியோன் காம்பவுண்ட் பகுதி சேர்ந்தவர் சின்னகாளை மகன் சூர்யா (22). கார் மெக்கானிக்கல் வேலை பார்க்கிறார். இவர் மீது ஆசாரிபள்ளம், நேசமணி நகர் காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. சில்வியா ஜோசப் தனது மகளை அந்த பகுதியில் உள்ள நடனப்பள்ளிக்கு அழைத்துச் செல்வது வழக்கம்.

அதன்படி கடந்த 26 ஆம் தேதி மாலை நடன பள்ளிக்கு மகளை அழைத்துக் கொண்டு சைமன் நகர், ஐஎஸ்ஆர்ஓ குடியிருப்பு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே பைக்கில் வந்த சூர்யா, சில்வியா ஜோசப்பையும் அவரது மகளையும் தடுத்து நிறுத்தியதுடன் சில்வியா ஜோசப்பை கையை பிடித்து இழுத்து தவறான நோக்கத்தில் ஆபாசமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதை அடுத்து இரண்டு பேரும் சத்தம் போடவே கொலை மிரட்டல் விடுத்து உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சில்வியா ஜோசப் நேசமணி நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சூர்யாவை கைது செய்தனர்.

Tags:    

Similar News