யூடியுபர் TTF வாசனுக்கு ஜாமின்!

செல்போன் பேசியபடி காரை அஜாக்கிரதையாக ஓட்டியதாக யூடியுபர் TTF வாசன் மீது தொடரப்பட்ட வழக்கில் வாசனுக்கு ஜாமின் வழங்கி மாவட்ட நீதிமன்றம் உத்தரவு

Update: 2024-05-30 12:33 GMT

டிடிஎப் வாசன்

யூடியுபர் TTF வாசனுக்கு பைக் விபத்து தொடர்பான வழக்கு ஒன்றில் 10ஆண்டுகள் பைக் ஓட்டுவதற்கு நீதிமன்றம் தடை விதித்தது. இதன் காரணமாக தற்போது TTF வாசன் LLR லைசென்ஸை பயன்படுத்தி தனது காரின் மூலம் பல்வேறு பகுதிகளுக்கும் சுற்றிவருகிறார். அதனை கார் ஓட்டியபடி வீடியோவாக பதிவு செய்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி இரவு 7.50 மணிக்கு வண்டியூர் டோல்கேட் பகுதியில் TN 40 AD 1101 என்ற காரை அஜாக்கிரதையாகவும் கவன குறைவாகவும் பொது மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாக செல்போனில் பேசி கொண்டே ஓட்டியதாக மதுரை மாநகர சமூக ஊடகப்பிரிவு கண்காணிப்பு அலுவலருமான மணிபாரதி என்பவர் அளித்த புகாரின் கீழ் அண்ணாநகர் காவல்துறையினர் TTF வாசன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இது தொடர்பான விசாரணைக்காக சென்னையிலிருந்து நேற்றிரவு TTF வாசன் கைது செய்யப்பட்டு மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதனையடுத்து மரணத்தை விளைவிக்கும் வகையில் பிறருக்கு மரணம் உண்டாகும் என்ற தெளிவுடன் ஒரு வாகனத்தை இயக்கியதாக 308 பிரிவின் கீழும் வழக்குப்பதிவு என 7 பிரிவுகளாக மாற்றப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் TTF வாசனுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்ட பின்னர் மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு ஆஜர் படுத்துவதற்காக அண்ணாநகர் காவல் நிலையத்தில் இருந்து காவல் துறையினர் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார். _அப்போது காவல்நிலையத்தின் முன்பாக பேசிய டிடிஎப் வாசன்._ நான் யாருடைய உயிருக்கு பங்கம் விளைவித்தேன், தன் மீது வேண்டுமென்றே பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போதையில் காரை ஒட்டி இரண்டு பேரை கொன்றவர்க்கு பெயில் எனக்கு வழக்கா.? சட்டம் என்பது எல்லோருக்குமானது தான், ஆனால் சாலையில் மதுபோதையில் செல்பவர்கள் மீது நடவடிக்கைகள் இல்லை என் மீது மட்டும் போனில் அவுட் ஸ்பீக்கரில் பேசியபோதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நான் நீதித்துறையை நம்பியுள்ளேன், எனக்கான நீதி எனக்கு கிடைக்கனும் என முழக்கமிட்டார். இதேபோன்று நீதிமன்ற வளாகத்தில் சென்றபோது என்னைப் பார்த்து தான் இளைஞர்கள் கெட்டுப் போகிறார்களா? எனவும் வீதிக்கு ஒரு டாஸ்மாக் உள்ளது தெரியாதா எனவும் முழக்கமிட்டபடி சென்றார். இதனையடுத்து வழக்கு விசாரணையானது மதுரை மாவட்ட 6ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி சுப்புலெட்சுமி முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது டிடிஎஃப் வாசன் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டபோது._ டிடிஎப் வாசனால் எந்தவொரு தனிமனிதனும் பாதிக்கவில்லை, புகாரும் அளிக்கவில்லை, சென்னையில் இருந்து சென்ற போது எந்த காவலரும் விதிமீறல் குறித்து பார்க்கவில்லையா? 15ஆம் தேதி வீடியோவை பார்த்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். டிடிஎப் வாசன் காரை இயக்கியதால் எந்த புகாரும் கொடுக்கவில்லை, காவலர் கொடுத்த புகாரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, வாசனால் பொதுமக்கள் எந்தப்பாதிப்பும் அடையவில்லை எனவும், வாசனுக்கு முதுகுவலி மற்றும் கண்ணாடி அணிந்து தான் வெளியே செல்ல முடியும் எனவும் 4ஆம் தேதி படத்தில் நடிக்க உள்ளார். அதனால் ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டனர். _

அப்போது அரசுத்தரப்பு வழக்கறிஞர் வாதிட்டபோது._ வாசன் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார். ஏற்கனவே அவரது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. எந்தவிதமான வாகனத்திலும் எந்தவிதம் சாகசமும் செய்ய மாட்டேன் என பிராமாணப்பத்திரம் எழுதிக்கொடுத்துள்ளார். அதனை மீறியுள்ளார் எனவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதனை அடுத்து வழக்கு விசாரணையை பிற்பகல் 2:40 மணிக்கு ஒத்திவைத்த பின்பாக மீண்டும் விசாரணைக்கு வந்த போது நீதிமன்றத்தில் TTF வாசன் ஆஜர்படுத்தப்பட்டார். _டிடிஎப் வாசன் தரப்பு._ நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம், திருந்தி வாழ்ந்து வருகிறார் டிடிஎப் வாசன், வளர்ந்து வரும் நபர் டிடிஎப் வாசன், படத்தில் நடிக்க 25 லட்ச ரூபாய் முன்பணம் வாங்கி உள்ளார் எனவும் வாதிட்டார். _அரசு தரப்பு வாதம்_ TTF வாசன் யூடியூபர் இவரை லட்சக்கணக்கானோர் பின் பற்று கின்றனர். இவரை பார்த்து அனைவரும் கெட வாய்ப்புள்ளது. _வாசன் தரப்பு வாதம்._ சினிமாவில் நடிகர் ரஜினி சிகரெட் பிடிக்கிறார் -அ தனால் எல்லாம் கெட்டு போகிறார்களா.? _இதனைத்தொடர்ந்து._ ஏன் வேகமாக செல்கிறீர்கள் என வாசனிடம் நீதிபதி கேள்வி எழுப்பியபோது.? நான் வேகமாக ஓட்டவில்லை, என் மீது பொய் வழக்குபோட்டுள்ளனர். தந்தை இல்லாத நிலையில் கடும் சிரமத்திற்கு மத்தியில் படித்தேன் என டிடிஎப் வாசன் தெரிவித்தார். இதனையடுத்து நீதிபதி அவர்கள் : 308 பிரிவை ரத்து செய்து TTF வாசனுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். 

Tags:    

Similar News