ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பார்வை பறிபோன இளைஞருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு
By : King 24x7 Desk
Update: 2025-03-19 15:24 GMT

2017 மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் போலீசார் தாக்கியதில் ஒரு கண்ணில் பார்வை பறிபோன இளைஞருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடாக வழங்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. இளைஞரின் தாயார் தொடர்ந்த வழக்கில், 12 வாரங்களில் இழப்பீட்டு தொகையை அரசு வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது.