சென்னை வார்டு உறுப்பினர்களின் மேம்பாட்டு நிதி ரூ.50 லட்சத்தில் இருந்து ரூ.60 லட்சமாக உயர்வு: மாநகராட்சி
By : King 24x7 Desk
Update: 2025-03-19 07:21 GMT

சென்னை மாநகராட்சி
சென்னை வார்டு உறுப்பினர்களின் மேம்பாட்டு நிதி ரூ.50 லட்சத்தில் இருந்து ரூ.60 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையின் முக்கிய வழித்தடங்களில் 200 பேருந்து நிறுத்தங்களில் நிழற்குடை அமைக்க ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் 1.80 லட்சம் தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ரூ.681 கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.