வாக்கு எண்ணிக்கை மைய முன்னேற்பாட்டுப் பணி - ஆணையர் ஆய்வு

நாடாளுமன்ற தேர்தல் முன்னிட்டு, சென்னை மாவட்டத்தை உள்ளடக்கிய 3 நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையங்களுக்கான முன்னேற்பாட்டுப் பணிகளை சென்னை மாநகராட்சி ஆணையர் ஆய்வு செய்தார்.;

Update: 2024-01-11 12:49 GMT

நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 2024னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடக்கிய 3 நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையங்களுக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும் சென்னை மாநகராட்சி ஆணையருமான ராதாகிருஷ்ணன், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோர்  பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 2024னை முன்னிட்டு கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்படவுள்ள தென்சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்திற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்தும் இராணி மேரி கல்லூரியில் மேற்கொள்ளப்படவுள்ள வடசென்னை நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்திற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்தும். லயோலா கல்லூரியில் மேற்கொள்ளப்படவுள்ள மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்திற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்தும் மாவட்ட தேர்தல் அலுவலர்/கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையர் ஜெராதாகிருஷ்ணன், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்திப் ராய் ரத்தோர் ஆகியோர்  பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு. அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினர்.

Tags:    

Similar News