ராசிபுரம் ஸ்ரீ பத்மாவதி தாயார், சமேத ஸ்ரீ ஸ்ரீநிவாசன் அலங்கார பூஜா உற்சவம்
Update: 2023-09-30 10:36 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பட்டணம் ரோடு ராமமூர்த்தி டீக்கடை அருகில் அமைக்கப்பட்டிருக்கும் அலங்கார பந்தலில், ஸ்ரீ பத்மாவதி தாயார் மற்றும் சமேத ஸ்ர ஸ்ரீநிவாசன் அலங்கார பூஜா உற்சவம் நடைபெற்றது.
இதை முன்னிட்டு, நேற்று காலை 5 மணி அளவில் கோபூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, 6 மணிக்கு முதல்காலப் பூஜை நடந்தது. பகல் 12 மணிக்கு உச்சி கால பூஜை, பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
மாலை 7 மணிக்கு சாயரச்சம் பூஜை, பிரசாதம் வழங்குதல் நடைபெறும். விழா ஏற்பாட்டினை ஸப்தகிரி நண்பர்கள் குழுவினர் செய்திருந்தனர்.