எம்.எஸ். உதயமூர்த்தி ஸ்கூல் ஆஃப் எக்ஸலென்ஸ் பள்ளியின் புதிய உதயம்

முப்பெரும் விழா கொண்டாட்டம்

Update: 2023-10-04 05:06 GMT

கிரண்பேடி பங்கேற்பு 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நாமக்கல் எம்.எஸ். உதயமூர்த்தி ஸ்கூல் ஆஃப் எக்ஸலென்ஸ் பள்ளி தற்போது கைலாஷ் ஸ்கூல் ஆஃப் எக்ஸலென்ஸ் (சிபிஎஸ்இ) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு திறப்பு விழா கொண்டாடப்பட உள்ளது.

நாமக்கல் பரமத்தி சாலையில் கைலாசம் எஜுகேஷனல் டிரஸ்டின் சார்பாக இயங்கி வந்த நாமக்கல் எம்.எஸ். உதயமூர்த்தி ஸ்கூல் ஆஃப் எக்ஸலென்ஸ் பள்ளி தற்போது கைலாஷ் ஸ்கூல் ஆஃப் எக்ஸலென்ஸ் (சிபிஎஸ்இ) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான புதியக் கட்டிடத்திறப்பு விழா. நூல் வெளியீட்டு விழா மற்றும் 24ஆம் ஆண்டு விளையாட்டு விழா வருகிற 07-10-2023 (சனிக்கிழமை) அன்று முப்பெரும் விழாவாக இனிதே நடைபெறவுள்ளது.

கைலாஷ் ஸ்கூல் ஆஃப் எக்ஸலென்ஸ் சிபிஎஸ்இ பள்ளியின் புதியக்கட்டிடத்தை நீதியரசர். P.S. தினேஷ்குமார் உயர்நீதிமன்ற நீதிபதி கர்நாடகா மற்றும் பாண்டிச்சேரி முன்னாள் ஆளுநர், டாக்டர். கிரண்பேடி IPS ஆகியோர் இணைந்து புதியக் கட்டிடத்தைத் திறந்து வைக்க உள்ளனர்.

கிருத்திக் கைலாஷ், பாண்டிச்சேரி முன்னாள் ஆளுநர், கிரண்பேடி IPS அவர்களுடன் பணியாற்றி அவர்களின் அனுபவங்களை "மக்களின் ஆளுநர்" என்ற தலைப்பில் நூலாக தொகுத்துள்ளார்.

கிருத்திக் கைலாஷின் "மக்களின் ஆளுநர்" என்ற நூலை நீதியரசர் P.S. தினேஷ்குமார் கர்நாடகா உயர்நீதி மன்ற நீதிபதி அவர்கள் வெளியிட்டு சிறப்புரையாற்றுகிறார். "மக்களின் ஆளுநர்” என்ற முதல்பிரதியைப் டாக்டர். கிரண்பேடி IPS அவர்கள் பெற்றுக் கொள்கிறார்.

புதியக்கட்டிட திறப்பு விழா, நூல் வெளியீட்டு விழா மற்றும் 24-ஆம் ஆண்டு விளையாட்டு விழாவிற்கு உயர்திரு. P. மகேஸ்வரி மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி மற்றும் உயர்திரு. P. கணேசன் மாவட்ட கல்வி அதிகாரி (தனியார் பள்ளிகள்) நாமக்கல். ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.

முப்பெரும் விழாவினை சிறப்பிக்கும் பொருட்டு பள்ளியின் டிரஸ்டிகள் கை.கதிர்வேல் (மேனேஜிங் டிரஸ்டி) க. ஆர்த்தி லட்சுமி (டிரஸ்டி), க தீக்ஷா ( டிரஸ்டி), க. கிருத்திக் கைலாஷ் (டிரஸ்டி) மற்றும் பள்ளிமுதல்வர், துணை முதல்வர், ஆசிரியர்கள், மாணவர்கள் விழாவினை சிறப்பிக்கும் பொருட்டு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News