பள்ளி மாணவ மாணவிகளுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

Update: 2023-11-25 08:52 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விருதுநகர் அல்லம்பட்டி சௌடாம்பிகா மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் ஆணைப்படி விருதுநகர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின் படி விருதுநகர் வட்ட சட்டப் பணிகள் குழுவின் சார்பாக உலக குழந்தைகள் தின கொண்டாட்டத்தின் பகுதியாக விருதுநகர் அல்லம்பட்டி சௌடாம்பிகா மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் கூடுதல் மாவட்ட நீதிபதி T.V.ஹேமானந்தக் குமார் தலைமை தாங்கி உரையாற்றினார். அவர் பேசும்போது "குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை சட்டங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும், அனைவரும் அடிப்படை தேவைகள் மறுக்கப்படும் போதும், சட்ட உதவிக்கும் அனைத்து நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்டப் பணிக்குழுவை நாடவேண்டும்" என்றார். இதில் வட்ட சட்டப்பணிக்குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான R.V. இராஜகுமார் முன்னிலை வகித்தார்.மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் கார்த்திகை ராஜன், வோல்டு விஷன் தொண்டு நிறுவன திட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி, பள்ளி தலைவர் ராஜேந்திரன், செயலர் திரவியம். தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியன் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அளவில் நீச்சல் போட்டியில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பதக்கமும், சான்றிதழையும் கூடுதல் மாவட்ட நீதிபதி , சார்பு நீதிபதி வழங்கினார்கள். நீச்சல் பயிற்சி மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சி உபகரணங்களை நீதிபதிகள் மாணவர்களுக்கு வழங்கி ஊக்குவித்தனர் இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Similar News