போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு

கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட எஸ்பி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்

Update: 2024-08-21 15:31 GMT
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா தலைமையில் பெரம்பலூர் மாவட்டம் தனலெட்சுமி சீனிவாசன் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு சாலைப் பாதுகாப்பபு தலைக்கவசம் அணிவது போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாணவர்களிடம் போதைப்பொருள் உபயோகிப்பது சட்டத்திற்கு புறம்பான செயலாகும் அது மட்டுமில்லாமல் அதனால் ஏற்படும் பாதிப்புகள் விலைமதிப்பில்லா உயிரை பறித்துவிடும், போதைப்பொருட்களை விற்பது, வாங்குவது, உபயோகிப்பது என அனைத்தும் தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் போதைப்பொருட்கள் உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை குறைத்து மூளையினை செயலிழக்கச் செய்துவிடும் எனக் கூறினார்கள். மேலும் சாலைகளில் பயணிக்கும் போது பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டுமெனில் இருசக்கர வாகனம் எனில் தலைக்கவசம் அணிந்தும் நான்கு சக்கர வாகனம் எனில் சீட்பெல்ட் அணிந்தும் பயணிக்கும் போது எதிர்பாராத விபத்துக்கள் ஏற்பட்டாலும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் பெரிதும் தவிர்க்கப்படும் என்றும் கூறி சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு குறும்படம் மாணவர்களிடம் காண்பிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறுகையில் பெரம்பலூர் மாவட்டத்தை போதைப்பொருட்கள் இல்லாத மாவட்டமாக மாற்ற தொடர்ந்து மாவட்ட காவல்துறையினர் முயன்று வருவதாகவும் மாணவ சமுதாயம் அதற்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் மேலும் கஞ்சா கள்ளச்சாராயம் போன்ற போதைப்பொருட்களை தயாரிப்பது விற்பது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார்கள். மேலும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது பகுதியில் சட்டவிரோதமாக கள்ளசாராயம் காய்ச்சுதல், விற்றல் மற்றும் ஊறல் போடுதல் போன்ற சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டால் காவல்துறையிடம் தெரிவிக்கலாம் என்றும் தகவல் தெரிவிப்பவர்களின் இரகசியம் காக்கப்படும் என்றும் கூறினார்கள்.

Similar News