கூட்டம் கூட்டமாக உலாவரும் காட்டெருமைகள்

கொடைக்கானலில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் கூட்டம் கூட்டமாக உலாவரும் காட்டெருமைகள்

Update: 2024-08-29 04:23 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் கொடைக்கானல் எம் எம் தெரு , செட்டியார் பூங்கா, மலர்ந்த ரோஜா பகுதிகளில் கூட்டம் கூட்டமாக காட்டெருமைகள் உலா வருகின்றன இப்பகுதியில் பள்ளி குழந்தைகள் கல்லூரி மாணவ மாணவியர்கள் சென்று வரும் சூழல் உள்ளது காட்டெருமை மக்கள் வாழும் பகுதியில் அதிகம் உலா வருவதால் 4 வாகனம் மற்றும் இருசக்கர வாகனங்களில் சொல்பவர்கள் காட்டெருமை தாக்கிவிடும் என்ற அச்சத்தில் கடந்து செல்கின்றனர். கடந்த இரண்டு மாதங்களாகவே காட்டெருமை நகர் பகுதிக்குள் வரும் சமயங்களில் மூன்றுக்கு ஏற்பட்டோரை காட்டு எருமைகள் முட்டியுள்ளது. இதில் ஞாயிறு வார சந்தையின் போது தமிழ் ஆசிரியர் ஒருவரை மூட்டியது குறிப்பிடத்தக்கது . இது போன்ற அடிக்கடி காட்டு எருமைகள் நகர் பகுதிக்குள் உலா வந்து கொண்டிருக்கிறது. இதுவரையிலும் கொடைக்கானல் வனத்துறையினர் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றன . மேலும் காட்டு எருமை காட்டு பன்றியால் கொடைக்கானல் நகர் பகுதிகளில் உள்ள மக்கள் அனைவரும் அச்சத்துடன் வெளியே சென்று வருகின்றனர்.

Similar News