பல்வேறு திட்ட பணிகள் குறித்து அதிரடியாக ஆய்வில் இறங்கிய ஆட்சியர்!!

மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, பாண்டமங்கலம் மற்றும் மோகனூர் பேரூராட்சி பகுதிகளில் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்

Update: 2024-08-29 13:04 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம், பாண்டமங்கலம் மற்றும் மோகனூர் பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் இன்று மாவட்ட ஆட்சியர் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியர் பாண்டமங்கலம் பேரூராட்சி, அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, பள்ளியில் மாணவியர்கள் வருகை விபரம், அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்து, மாணவியர்களுடன் கலந்துரையாடிய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உயர்கல்வி பயில அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், அரசுப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு உயர்கல்வி பயில 7.5 சதவிகித இடஒதுக்கீடு உள்ளிட்ட திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். மேலும், மாணவியர்களுக்கு தயார் செய்யப்பட்டிருந்த மதிய உணவின் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு, பாண்டமங்கலம் பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2021-2022ன் கீழ் ரூ.90.76 இலட்சம் மதிப்பீட்டில் வார சந்தை மேம்படுத்தப்பட்டுள்ளதை ஆய்வு மேற்கொண்டார். பாண்டமங்கலம் கிளை நூலகத்தில் ஆய்வு மேற்கொண்டு நூலகத்தில் உள்ள புத்தகங்களின் எண்ணிக்கை, நூலகத்திற்கு வருகை தரும் வாசகர்களின் விபரம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்து, நூலகத்தை தூய்மையாக பராமரிக்குமாறு உத்தரவிட்டார். பாண்டமங்கலம் பூங்காவில் ஆய்வு மேற்கொண்டு, மழை காலங்களில் பூங்காவில் அதிகளவில் புற்கள் வளராத வகையில் தூய்மை பணிகளை மேற்கொள்ளுமாறும், விளையாட்டு உபகரணங்களை முறையாக பராமரிக்குமாறும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து, மோகனூர் பேரூராட்சியில் அம்ருத் திட்டத்தின் கீழ் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு, நீர்த்தேக்கத்தொட்டியின் கொள்ளளவு, பயன்பெறும் மொத்த குடியிருப்புகளின் விபரம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், மோகனூர் பேரூராட்சியில் பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Similar News