திருப்பூரில் ஓணம் பண்டிகையையொட்டி மமாமாநகராட்சி பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை கிடு கிடு உயர்வு!

திருப்பூர் மாநகராட்சி பூ மார்க்கெட்டில் ஓணம் பண்டிகையையொட்டி பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்தன.;

Update: 2024-09-14 12:13 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கேரள மக்களின் பண்டிகையான ஓணம் பண்டிகை நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. கேரள மாநிலத்தை ஒட்டி உள்ள திருப்பூர் மாவட்டத்திலும் ஏராளமான கேரள மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் திருப்பூரிலேயே தங்கி பணிபுரிந்து வருவதால் கடந்த சில வருடங்களாக திருப்பூரில் தங்களது உறவினர்களுடன் ஓணம் பண்டிகை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் ஓனம் பண்டிகைக்கு முக்கிய பொருளான பூக்கள் வாங்க இன்று திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள பூ மார்க்கெட்டில் அதிக அளவு திரண்டு இருந்தனர். திண்டுக்கல் ,  சேலம் ,  நாமக்கல் ,  சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மல்லிகை பூ ,  சேலத்தில் இருந்து அரளி பூ விற்பனைக்காக கொண்டுவரப்பட்டது.   தர்மபுரி ,  கிருஷ்ணகிரி ,  ஓசூர் ஆகிய பகுதிகளில் இருந்து செவ்வந்தி பூ  விற்பனைக்காக கொண்டுவரப்பட்டது. ஓணம் பண்டிகை என்பதால் வழக்கத்தை விட அதிக அளவு பூக்கள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டிருந்தது. வரத்து அதிகமானதால் மற்ற மாவட்டங்களை விட திருப்பூரில் பூக்களின் விலை குறைந்து காணப்பட்டது. திருப்பூர் பூ மார்க்கெட்டில் நேற்று மல்லிகைப்பூ கிலோ 800 ரூபாயும் , முல்லைப்பூ 400 ரூபாய்க்கும் , ஜாதிமல்லி 480 ,  சம்பங்கி 200 , பன்னீர் ரோஸ் 120 ரூபாய் ,  செவ்வந்தி 100 ,  அரளி 80,  செண்டுமல்லி 60.  வாடாமல்லி 200 ,  பெங்களூர் கலர் ரோஸ் 320 , பெங்களூர் தக்காளி ரோஸ் 240 ,  கலர் செவ்வந்தி 320 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஆண்டு ஒணம் பண்டிகைக்கு மல்லிகைப்பூ 1000 ரூபாய் முதல் 1200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டதாகவும் இந்த ஆண்டு வரத்து அதிகமானதால் விலை குறைந்ததாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும். அரளி , செண்டுமல்லி , செவ்வந்தி உள்ளிட்ட பூக்கள் அதிக அளவு வியாபாரமாகும் என எதிர்பார்த்த நிலையில் போதிய வியாபாரம் இல்லாததால் தேக்கமடைந்ததாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்

Similar News