வையப்பமலையில் புறநகர் காவல் நிலையம் அமைக்க தீர்மானம்:

வையப்பமலையில் புறநகர் காவல் நிலையம் அமைக்க வேண்டும். மல்லசமுத்திரம் பகுதியை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய மாநாட்டில் தீர்மானம்.

Update: 2024-10-13 10:40 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருச்செங்கோடு அருகே, எலச்சிபாளையம், மல்லசமுத்திரம் ஒன்றியம் பெரியமணலி சக்திநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிழக்கு ஒன்றிய முதல் மாநாடு ஞாயிறு அன்று நடைபெற்றது. இந்த மாநாடு கொடியை கிளை செயலாளர் கே. செல்வராஜ் ஏற்றி வைத்தார். மூத்த தோழர் கே. பூபதி, ஜீ.பழனியம்மாள் உள்ளிட்டோர் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிக் குழு உறுப்பினர் டி.பூபதிமுருகன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாவட்ட குழு உறுப்பினர் மோகனப்பிரியா வரவேற்புரை கூறினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ந. வேலுசாமி துவக்கி வைத்து பேசினார். ஒன்றிய செயலாளர் வி.தேவராஜ் வேலை அறிக்கை சமர்ப்பித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு.சுரேஷ் வாழ்த்து பேசினார். 9 பேர் ஒன்றிய குழு தேர்வு செய்யப்பட்டு மீண்டும் ஏகமானதாக வீ.தேவராஜ் ஒன்றிய செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். தமிழ்மணி. புதிய ஒன்றிய குழு உறுப்பினர்களை அறிமுகப்படுத்தி நிறைவுறையாற்றினார். வையப்பமலை பெரியமணலி மையமாகக் கொண்டு புறநகர் காவல் நிலையம் வையப்பமலையில் அமைக்க வேண்டும். விவசாயிகள் பயன்பெறும் வகையில் மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரி காவிரி நீரை திருமணிமுத்தாற்றில் இணைக்கும் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளம் உயர்த்தி வேலை நாட்களை அதிகப்படுத்த வேண்டும். புதிய ரேஷன் கார்டு. முதியோர் ஓய்வூதியம். மகளிர் உரிமை தொகை கேட்டு மனு செய்துள்ள அனைவருக்கும் வழங்க வேண்டும். வையப்பமலை, பெரியமணிலி, பாலமேடு உள்ளிட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி 24 மணி நேரமும் பிரசவம் பார்ப்பதை உறுதி செய்ய வேண்டும். செக்காரப்பட்டியில் பேருந்து நிறுத்தத்தில் அனைத்து பேருந்துகளும் நின்று செல்வதை உறுதிப்படுத்த வேண்டும். மல்லசமுத்திரம் பேரூராட்சி தரத்தை உயர்த்தி தனி தாலுகாவாக அறிவித்திட வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இறுதியாக, ஒன்றிய குழு உறுப்பினர் ஆர்.துரைசாமி நன்றியுரை ஆற்றினார்

Similar News