விசைத்தறி தொழிலாளர்கள் நூதனப் போராட்டம்
பள்ளிபாளையத்தில் விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர் நூதன போராட்டத்தை மேற்கொண்டனர்
பள்ளிபாளையத்தில் விசைத்தறி தொழிலில் பணியாற்றும் அனைத்து பிரிவு ஆண் பெண் தொழிலாளர்களுக்கும் 2023, 2024 ஆம் ஆண்டு தீபாவளி போனஸ் 20 சதம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் தொடர்ந்து பல்வேறு இயக்கங்கள் நடைபெற்று வரும் நிலையில், தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் , இன்னமும் தீபாவளி போனஸ் ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைக்கு அழைக்காத விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்களை கண்டித்தும் ,இது உரிய நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகளை கண்டித்தும், பட்டை நாமம் போட்டு கையில் தட்டேந்தி கண்டன ஆர்ப்பாட்டமானது ஞாயிற்றுக்கிழமை அன்று பள்ளிபாளையம் பேருந்து நிறுத்த பகுதியில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க நிர்வாகி ஏ.அசன் .தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளை விளக்கி நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எம்.அசோகன், மாவட்ட தலைவர் கே.மோகன், ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். இதில் நூதனமாக தீபாவளி போனஸ் விவகாரத்தில் அலட்சியமாக நடந்து கொள்ளும் நிர்வாகங்களை கண்டித்து ,பட்டை நாமம் போட்டு, கையில் தட்டேந்திய படி கண்டன ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விசைத்தறி நிர்வாகங்களை கண்டித்து தீபாவளி போனஸ் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,பத்து ஆண்டுகளாகவே தீபாவளி போன உயர்த்தப்படாத நிலை உள்ளது, இதற்கு உரிய தீர்வு எட்ட வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்களை தொழிலாளர்கள் எழுப்பினர்.