குமரி மாவட்டம் பளுகல் அருகே உள்ள முவோட்டுகோணம் ஈஞ்சவிளை பகுதியை சேர்ந்தவர் விஜின்ராஜ் (வயது 24), ஆட்டோ டிரைவர். இவர் சம்பவத்தன்று இரவு ஆட்டோவை வீட்டில் நிறுத்தி விட்டு பொருட்கள் வாங்குவதற்காக இரு சக்கர வாகனத்தில் பளுகல் சென்றார். மூவோட்டு கோணம் ஏலாகரையில் வந்த போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி ஓடையில் மோட்டார் சைக்கிள் அங்குள்ள நீர் ஓடையில் விழுந்தது. இதில் விஜின்ராஜ் தலையில் பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்திருந்தார்.அதன் பின்னர் அவரது உடலை குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து பளுகல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.